ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் காவிரி டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.
கடலூர்
விவசாய நிலங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் அதற்கு எதிராக விவசாயிகள் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கடலூரில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், ஓய்வூதியர் நலச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடலூர் தலைமைத் தபால் நிலையம் அருகே ஒன்று கூடினர் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை
நாகை அவுரித் திடலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கண்டனப் பேரணி நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கண்டனப் பேரணியை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தஞ்சை
தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற கண்டனப் பேரணியில் கட்சி பாகுபாடு இன்றி விவசாயிகள், பெண்கள் இளைஞர்கள் என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
திருவாரூர்
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட கண்டனப் பேரணி பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்தது.பேரணியில் அ.தி.மு.க., பா.ஜ.க. தவிர மற்ற கட்சிகளை சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட 1500க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
