திருப்பதி ஏழுமலையான் கோவிலில் எந்தவித சிபாரிசுக் கடிதங்களும் இல்லாமல் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களை விஐபி தரிசனத்தில் அனுமதிக்க தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாக அலுவலக செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால், தேர்தல் சமயத்தில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஆயிரத்து 371 கிலோ தங்கத்தை மீண்டும் ஓராண்டுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஸ்ரீவானி அறக்கட்டளை என்பது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திருப்பதி கோவிலை நிர்மாணித்து அங்கு வசதிகளை செய்து தர உருவாக்கப்பட்ட அறக்கட்டளையாகும்.
