சமூக ஆர்வலர் மாரிதாஸ் தி.மு.க பற்றி வெளியிட்ட வீடியோக்கள் தி.மு.க கட்சி தலைமையை ஆட்டம் காண செய்துள்ளது.
தி.மு.க வின் உண்மை முகம் என மாரிதாஸ் கூறிய வீடியோ ஒன்று இணைய தளத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பதிவில், காஷ்மீர், பிரிவினைவாதிகள், திமுக., தொடர்பு என பல தகவல்களை வெளியிட்டிருந்தார். இது திமுக.,வினருக்கு கடும் கோபத்தை வரவைத்திருக்கிறது.
திமுக., தொண்டர்கள், ஆதரவாளர்கள், மாரிதாஸ் வாக்கிங் போகும் போது நம்ம வழக்கப்படி சோலிய முடிச்சிராம வேடிக்கை பாக்கிறீங்களே என்று கருத்துப் பதிவு செய்து மேலும் சூட்டைக் கிளப்பினர்.
இந்நிலையில், திமுக., மீது அவதூறுக் கருத்துகள் பரப்பப் படுவதாகக் கூறி, மாரிதாஸ் மீது திமுக தரப்பில் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், மாரிதாஸுக்கு ஆதரவாக, பாஜக.வின் தேசியச் செயலர் ஹெச்.ராஜா தனது கருத்தைப் பதிவு செய்தார். அவரது டிவிட்டர் பதிவில்….
இந்நிலையில், மாரிதாஸுக்கு ஆதரவாக, டிவிட்டர் பதிவுகளில் #WeSupportMaridhas என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆக்கப் பட்டு வருகிறது.
மாரிதாஸ் மீதான திமுக.,வின் புகார் குறித்து, ராஜா சங்கர் என்பவர், தனது பேஸ்புக்கில் பதிவு செய்த கருத்து…
மாரிதாஸ் ஜிக்கு ஹிந்துக்களாகிய நம் ஆதரவு எப்போதும் உண்டு. அதோடு.. தொடர்ந்து பிரதமரின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இவர் மீது காழ்ப்புணர்வு காரணமாக தேசவிரோத திமுக தற்போது பொய் வழக்கு போட்டுள்ளது.
ஒரு நல்ல பிஜேபி ஆதரவாளர் இல்லாமல் தமிழகமும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
தி.மு. க இப்போது அருமை நண்பர் மாரிதாஸ் அவர்கள் மீது மதக்கலவரத்தை தூண்டுவதாக புகார் கொடுத்துள்ளது.
என்னாடா வழக்கமா வாங்கிங்க் போனா போட்டுத்தள்ளுவானுக என்ற நிலையிலே இருந்து இப்போது என்ன தீடிரென திருந்திட்டானுக என நினைக்ககூடாது.
அந்த புகாரிலே முஸ்லீம்களுக்கு முஸ்லீம் அல்லாதோருக்கும் இடையே பகையை அருமை நண்பர் மாரிதாஸ் வளர்ப்பதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்துக்கள் என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் முஸ்லீம் அல்லாதோர் என சொல்லியுள்ளது.
அதுவும் காஷ்மீரிகளுக்கு ஆதரவு அளிப்பதை தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாக சொல்லி அது காஷ்மீர முஸ்லீம்கள் எல்லாம் தீவிரவாதிகள் என சொல்லுகிறார் என சொல்கீறது.
அதாவது திமுக மீது தவறு சொன்னதாக புகார் இல்லை.
மதக்கலவரத்தை தூண்டுவதாக புகார் கொடுக்கப்பட்டு அதிலே நடவடிக்கை எடுக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
திமுக மீது பொய் சொன்னார் என சொன்னால் நீதிமன்றத்திலே மானநஷ்ட வழக்குத்தான் போடலாம். எனவே இதை மதக்கலவர வழக்கு என கொண்டு போய் உள்ளதுகள். காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கும் என பார்க்கவேண்டும். இந்துக்களுக்கு எதிராகவே தமிழக காவல்துறை இருப்பதாக இருக்கும் ஒரு கருத்து இந்த விஷயத்திலே என்ன நடவடிக்கை எடுக்கீறார்கள் என்பதை பொறுத்து தெரியவரும். எது எப்படீருந்தாலும் நண்பர் மாரிதாஸை ஆதரிப்பது அவசியம்.
