திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் வரிசையில் பாம்பு புகுந்ததால் அலறியடித்து ஓடினர்.
இன்று சனிக்கிழமை என்பதால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வரிசை 2 கிலோ மீட்டர் தூரம் வரை நீண்டிருந்தது. திடீரென ஏழு அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று கூட்டத்தில் புகுந்ததால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர்.
உடனடியாக பாம்பு பிடிப்பவரை வரவழைத்து அந்த பாம்பை பிடித்து வனப்பகுதிக்குள் அதிகாரிகள் விடச் செய்தனர்.
