வெப்பச் சலனத்தால் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், ஆகிய கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் ஓரளவு மேகமுட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் மழைக்கு சாதகமான சூழல் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளதால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
