உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி முந்தைய உலக சாதனையையும் முறியடித்தார்.
டெல்லியில் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய துப்பாக்கிசுடும் போட்டிகள் வரும் 28-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதில் உத்தரப்பிரதேசத்தின் மீரட்டைச் சேர்ந்த 16 வயதான சவுரப் சவுத்ரி ஆண்கள் பிரிவில் நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் பங்கேற்று செர்பியாவைச் சேர்ந்த டாமிர் மிகெக்-ஐ (Damir Mikec ) பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
245 புள்ளிகளைப் பெற்ற சவுரப் சவுத்ரி, முந்தைய உலக சாதனையை ஒன்று புள்ளி 4 புள்ளிகளில் முறியடித்து அசத்தினார்.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் சொந்த மண்ணிலேயே தங்கம் வென்ற சவுரப் சவுத்ரி, ஏற்கெனவே கடந்த ஆண்டு நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் விளையாட்டில் சாம்பியன் பட்டம் வென்றவர். அடுத்த ஆண்டு ஜப்பானின் டோக்யோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்பதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
