காஞ்சிபுரம் அத்தி வரதர் சிலை தரிசனத்திற்கு வரும், பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், அவற்றை மேலும் அதிகப்படுத்துவது பற்றியும், அமைச்சர்கள், அதிகாரிகளுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோரும், தலைமைச் செயலாளர் கே.சண்முகம், டிஜிபி திரிபாதி உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
அத்தி வரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்களை முறைப்படுத்துவது, அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் அதிகரிப்பது, ஒரே நேரத்தில் அதிகளவில் பக்தர்கள் கூடுவதை தவிர்த்த, கூட்ட நெரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என்பன உள்ளிட்டவை குறித்து, அமைச்சர்கள், அதிகாரிகளுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
