நடப்பு ஆண்டில் நான்காவது முறையாக ரெப்போ வட்டி வகிதம் 0.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு, வாகனங்களுக்கான வட்டி வீதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டம் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தலைமையில் நடைபெற்றது! இந்தக் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.75 சதவீதத்தில் இருந்து 5.40 சதவீதமாக குறைத்து முடிவு எடுக்கப் பட்டது. மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் 7 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாக இருக்கும் என்று குறைக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலையைக் கருத்தில் கொண்டு இந்தியாவிலும் பொருளாதாரத்தை இன்னும் வலுப்படுத்த இந்த வட்டிவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி வீதம் மேலும் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
