புதுடில்லி : தேடப்படும் பொருளாதார குற்றவாளிகள், பயங்கரவாதிகள் உள்ளிட்டோர் மீது,
‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ வெளியிடுவதில், காலதாமதம் ஏற்படுவதாக, ‘இன்டர்போல்’ எனப்படும், சர்வதேச போலீஸ் அமைப்பின் பொதுச் செயலர், ஜுர்கென் ஸ்டாக்கிடம், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா கவலை தெரிவித்தார்.
டில்லி வந்துள்ள ஸ்டாக்கை நேற்று சந்தித்தபோது, பயங்கரவாதத்தை தூண்டும் வழக்கில் தேடப்படும் ஜாகிர் நாயக் உள்ளிட்டோர் மீது, உடனடியாக, நடவடிக்கை எடுக்கும்படி, அவர் கேட்டுக் கொண்டார்.
