சகோதர பந்தத்தை உருவாக்கும் ரக்சா பந்தன் பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு சுதந்திர தினமும் ரக்சா பந்தனும் ஒரே நாளில் வருவதால், எல்லையைக் காக்கும் பொறுப்பில் உள்ள ராணுவ வீரர்களை தங்கள் சகோதரர்களாகக் கருதி உள்ளூர் பெண்கள் ராக்கி கட்டினர். இந்தியா-வங்காளதேச எல்லையான மேகாலயாவின் ஷில்லாங் பகுதியில் காவல் காக்கும் வீரர்களுக்கு ஏராளமான பெண்கள் ராக்கி கட்டி ரக்சா பந்தனை கொண்டாடினர்.
