அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி 25ம் தேதி புளூம்பர்க் உலகளாவிய வர்த்தக மாநாட்டில் உரை நிகழ்த்துகிறார்.
மாநாட்டைத் தொடர்ந்து பல்வேறு பொருளாதார வல்லுனர்கள், தலைவர்களுடன் அவர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்வின் போது அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், வால்ட் டிஸ்னியின் தலைமை நிர்வாக இயக்குனர் பாப் ஐகர் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார். 24ந் தேதி ஐ.நா.
தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், சமகால உலகில் காந்தியடிகளின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் மோடி உரைநிகழ்த்துகிறார். நியுயார்க் பல்கலைக்கழகத்தில் காந்தி அமைதித் தோட்டத்தை திறந்து வைப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
