பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமர்ஒளிஆகியோர் இணைந்து காணொலி காட்சிமூலம் மோதிஹாரி-அம்லேக்கஞ்ச் இடையேயான பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும்குழாயைதிறந்து வைத்தனர் .
இந்தியாவும் நேபாளமும் நட்பு அண்டை நாடுகளாக இருக்க வேண்டும், என்கிற நோக்கத்தில்”இந்தியா-நேபாள எரிசக்தி ஒத்துழைப்பு திட்டத்தின் மூலம்எல்லை தாண்டிய பெட்ரோலியக் குழாய்த்திட்டம் முன்னெடுக்கபட்டது. சுமார் 60 கி.மீ க்கும் அதிகமான நீளமுள்ள இந்த பெட்ரோலியக் குழாய் திட்டம் தெற்காசியா பிராந்தியத்தில், முதன்முதலில் எல்லை தாண்டிய பெட்ரோலிய குழாய் திட்டமாக விளங்குகிறது.
முன்னதாக 1973 முதல்டேங்கர்கள் மூலமாக இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு பெட்ரோலிய பொருட்கள்கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இதற்குமாறாக குழாய்கள் மூலம்பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லப்பட்டால்போக்குவரத்து செலவுகள்கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளதாக” பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று புது டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாள பிரதமர் ஒளிஆகியோர் ஒன்றிணைந்து நேபாள-இந்தியஎல்லை தாண்டிய பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்லும்குழாய் இணைப்பு திட்டத்தைகாணொலி காட்சி மூலம் திறந்து வைத்தனர்.
