நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் தன்னுடைய அழகிய தோகைகளை விரித்தாடிய மயிலை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
திருக்குவளை, கொத்தங்குடி, ஆலத்தம்பாடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகள் மற்றும் வயல்களில் ஏராளமான மயில்கள் மற்றும் அதன் குஞ்சுகள் வசித்து வருகின்றன.
நேற்று இரை தேடி வயல்வெளிக்கு சென்றபோது வானம் கருமையாக காணப்பட்டதால் 2 மயில்கள் தன் அழகிய தோகைகளை விரித்து ஆடிய காட்சி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
