திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ர உற்சவத்திற்கான அங்குரார்ப்பணம் நடைபெற்றது.
ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் நடைபெறக்கூடிய அர்ச்சனைகள், உற்சவம் நேரங்களில் பக்தர்கள் மூலமாகவோ அல்லது பணியாளர்கள் மூலமாக தெரிந்தோ தெரியாமலோ ஏற்படக்கூடிய தோஷங்களுக்கு பரிகாரமாக ஒவ்வொரு ஆண்டும் பவித்திர உற்சவம் 3 நாட்களுக்கு நடத்தப்படுகிறது.
இன்று பவித்ரா மாலைகள் பிரதிஷ்டையும், ehis பவித்ர மாலைகள் சமர்ப்பணமும் நடைபெறுகிறது. பவித்ரோற்சவத்தையொட்டி நேற்றிரவு 9 மணி முதல் 10 மணி வரை வசந்த மண்டபத்தில் புற்று மண்ணை சேகரித்து நவதானியங்களை 9 பானைகளில் வைத்து அங்குரார்ப்பண பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து பவித்திர மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
