ஜம்மு: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். 4 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
இன்று முற்பகல் 11 மணியளவில் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா – பாகிஸ்தான் இடையே தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
