புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தப்படும்10 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி நடைபெற்ற வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் ஆகஸ்டு 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வரும் என்று அமைச்சர் கந்தசாமி வாய்மொழி உத்தரவாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜூலை 31 ஆம் தேதி இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு இந்த தடை உத்தரவு ஆகஸ்டு 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று முதல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் 10 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், எடுத்துச் செல்லுதல், விற்பனை செய்தல், சேகரித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
