சென்னை: 100 நாட்களில் மத்திய அரசு செய்த சாதனைகள் என்ன என்பது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கினார்.
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகிறது. இதையொட்டி மத்திய அரசு திட்டங்கள் குறித்த சாதனைகள் விளக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் 100 நாட்களில் என்ன சாதனை செய்துவிட்டது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதையடுத்து சென்னையில் கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.
காஷ்மீர்
அப்போது அவர் 100 நாட்களில் மத்திய அரசு சாதித்தவை குறித்து விளக்கினார். அவர் கூறுகையில் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி காஷ்மீருக்கான 370 சட்டத்தை நீக்கினோம். இந்த வாக்குறுதி ஜனசங்க காலத்திலிருந்து நாங்கள் முன் வைத்து வருவது ஆகும்.
மகளிர் ஆணையம்
காஷ்மீரில் 370 சட்டப்பிரிவால் எந்த உபயோகமும் இல்லை. ஆனால் தற்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு காஷ்மீரில் செயல்பாட்டுக்கு வந்தது. அங்கிருந்த தேசிய மகளிர் ஆணையமும் செயல்படாமல் இருந்தது.
முத்தலாக்
வங்கிகள் இணைப்பு மூலம் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னேறிச் செல்ல வைப்பதாகும். 5 டிரில்லியன் அதாவது 5 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத்தை முன்னேற்ற வழி வகை செய்யப்படும். முஸ்லிம் பெண்களின் திருமண வாழ்க்கைக்கு பாதுகாப்பில்லாத முத்தலாக் நீக்கப்பட்டது.
அடிப்படை வசதிகள்
அவ்வாறு கூறினால் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி மூலம் பொருளாதாரம் மேலும் வளரும். இன்னும் 2 ஆண்டுகளில் 1.95 கோடி வீடுகள் கட்டித் தரப்படும். 2022-ஆம் ஆண்டுக்குள் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.
வங்கிக் கணக்கு
மருத்துவ காப்பீட்டை வழங்கும் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் 41 லட்சம் பேர் உயர் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் 16 ஆயிரம் மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டமான ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ 6000 வழங்கும் திட்டம் அவரவர் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது என்றார்.
