புதுடில்லி: மத்திய நீர்வள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய நீர் விருதுகள் இன்று புதுடில்லியில் மாண்புமிகு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு.நிதின் கட்காரி அவர்களால் வழங்கப்பட்டது.
இந்தியாவின் தென் மண்டலத்தில் தமிழ்நாட்டில் சிறந்த மாவட்டங்களுக்கான விருதுகளில் மதுரை மாவட்டத்திற்கு நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் புதிதாக உருவாக்குதல் தொகுதியில் சிறந்த மாவட்டத்திற்கான முதல் பரிசும் நிலத்தடி நீர் செறிவூட்டல் பணிகளுக்காக மூன்றாவது பரிசும் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்திற்கு நதி மீட்டெடுத்தல் பணிக்காக மூன்றாவது பரிசு வழங்கப்பட்டது . சிவகங்கை மாவட்டத்திற்கு நீர் நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் புதிதாக உருவாக்குதல் பணிகளுக்கு மூன்றாம் பரிசு வழங்கப்பட்டது .மதுரை மாவட்டத்திற்கான விருதுகளை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு எஸ் .நடராஜன்.இ.ஆ.ப பெற்றுக்கொண்டார்.
சிவகங்கை மாவட்டத்திற்கான விருதுகளை சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ஜே. ஜெயகாந்தன்.இ.ஆ.ப., அவர்களும் பெற்றுக்கொண்டார். திருநெல்வேலி பெற்றுக் கொண்டனர் மாவட்டத்திற்கான விருதுகளை திருநெல்வேலியின் முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி.இ.ஆ.ப., மற்றும் தற்போதைய மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ்.இ.ஆ.ப., ஆகியோர் பெற்றுக் கொண்டனர்
