புதுச்சேரி: பேச்சுவார்த்தை நடத்த இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வர நாராயணசாமிக்கு கிரண்பேடி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து கிரண்பேடியின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தைக்கு நாராயணசாமி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மக்கள் பிரச்சனை முக்கியம் என்பதால் 39 கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.
