புதுடெல்லி: முல்லைப்பெரியாறில் புதிய அணை அமைக்கும் பணியில் ஈடுபடவில்லை என உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் தெரிவித்துள்ளது.
மாற்று அணை அமைப்பதற்கான தகவல்களை மட்டுமே திரட்டி வருகிறோம் என கேரள அரசு கூறியுள்ளது.
கேரள அரசின் பதிலை ஏற்று தகவல்களை திரட்ட கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. புதிய அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என தமிழகம் மனுத்தாக்கல் செய்த நிலையில் கேரள அரசு இத்தகவலை தெரிவித்துள்ளது.
