சேலம்: கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.50 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 19,000 கன அடியாகவும் நீர் இருப்பு 81.99 டி.எம்.சி.யாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
