சென்னையில் ஜனவரி 19 20 ஆகிய இரண்டு தினங்களில் லயோலா கல்லூரி வளாகத்தில் இலயோலா மாணவர் அரவணைப்பு மையம் (எல் எஸ் எஸ் எஸ்), லயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடக மையம் (ஏ எம் சி ) ஆகியவை இணைந்து கருத்துருவை நிலைநாட்ட கலைஞர்கள் ஆர்ப்பரிக்கும் வீதி விருது விழா கலை இலக்கிய பிரிவின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுள்ளது.
இவர்களோடு தமிழ்நாடு அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தன்னார்வ கலைஞர்கள் சங்கம் ஆகியவை இணைந்து விழாவை நடத்தி இருக்கிறார்கள்.
லயோலா கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்ட கண்காட்சி படங்கள் ராம ராஜ்யம், மீ_T00 – என்று பாரத மாதாவை இழிவுபடுத்தியும்,
ஏகாதிபத்திய தாசன் என்று பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களை இந்துக்கள் வழிபடும் அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி சுமந்து பறப்பது போலவும் , நந்தினி என்ற பெண் பிறப்பு உறுப்பில் திரிசூலம் வரைந்து – ரத்தம் வருவது போலவும் , ரஃபேல் ஊழல் பாஜக தாமரை சின்னம் , பாஜகவின் பயங்கரவாத ஆட்சியில் எழுத்தாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் ஜனநாயக சக்திகள் படுகொலை செய்யப்படுவதாகவும் மற்றும் அகண்ட பாரத கனவு கௌரி லங்கேஷ் படுகொலை , பெண்கள் தீட்டு, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மீது அவதூறு கருத்துக்கள் பரப்பும் வகையில் , ஸ்வச் பாரத் என்ற அடையாளத்தை நீளும் விவசாயிகள் தற்கொலை என்று அவதூறு பரப்பி ஒரு கெட்ட எண்ணத்தை உருவாக்க வேண்டும் திட்டமிட்ட எண்ணத்தோடு இந்த நிகழ்வை நடத்தி இருக்கிறார்கள்.
சென்னை லயோலா கல்லூரி நிர்வாகம் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பது தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் தெரியும் .
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் கெடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு மாணவர்களை போராட்டக்காரர்களாக, வன்முறையாளர்களாக தூண்டிவிட்டு பல்வேறு பொது அமைதியைக் கெடுப்பதற்கு காரணமாக இருப்பது மத்திய மாநில அரசுகளுக்கு முழுமைக்கும் தெரியும்.
மத்திய அரசாங்கத்தின் மீதும், மத்திய அரசாங்கத்தின் திட்டத்தின் மீதும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சியோடு கருத்துரிமை என்கின்ற பெயரால் தவறான கருத்து பிரச்சாரத்தை செய்வதை இந்து மக்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.
கிறிஸ்தவ மதத்தின் மீது எவ்வளவு அவதூறு கருத்துக்கள் இருக்கிறது அதைப்பற்றி எந்த விதமான கருத்து பிரச்சார விளம்பர பலகை வைக்க இந்த கல்லூரி நிர்வாகத்திற்கு தைரியம் இல்லை.
ஆனால் வேண்டுமென்றே பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீதும், மத்திய அரசாங்கம் திட்டம் குறித்தும் நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்த கூடிய வேலையை செய்யக் கூடிய ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மீதும் , அவதூறு பரப்ப கூடிய இழி செயலை செய்த சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி நிர்வாகத்தின் மீது – மத்திய, மாநில அரசும் , கல்லூரி கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்கு நடைபெற்ற இந்தக் கருத்தரங்கு. கண்காட்சி சம்பந்தமாக முழுமையான விசாரணை ஏற்படுத்தப்பட வேண்டும். இதில் பங்கேற்ற நபர்கள் , பேசிய கருத்துக்கள் குறித்து மத்திய மாநில அரசுகளின் உளவுத்துறை ஆய்வு மேற்கொண்டு தேசவிரோத தெய்வ விரோத அரசு விரோத கருத்துக்கள் இடம் பெற்று இருக்கின்ற காரணத்தால் இந்த கல்லூரி நிர்வாகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்வதோடு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் .
இதுபோன்ற கருத்தரங்குகள் இனிவரும் காலங்களில் நடைபெறாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் ஈடுபட வேண்டும் என மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்.
தேசப் பணியில்,
இராம. இரவிக்குமார்
மாநில பொதுசெயலாளர், இந்து மக்கள் கட்சி தமிழகம்.
