நாடு முழுவதும் 336 இடங்களில் நடைபெற்ற ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு சோதனைகளில் 3500 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன.
போலி இன்வாய்ஸ்கள் மூலம் ஏற்றுமதி செய்தது குறித்த புகார்கள் எழுந்ததை அடுத்து நடைபெற்ற அதிரடி சோதனையில் மேலும் 450 கோடி ரூபாய் அளவுக்கு வரி செலுத்திய தொகையை திரும்பப்பெறுவதற்கான போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வரிசெலுத்தாமல் ஏய்ப்போரை கண்காணித்து வந்த அதிகாரிகள் நேற்று சென்னை உள்பட முக்கிய நகரங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனைகளில் ஈடுபட்டனர். நுண்ணறிவுப் பிரிவு, வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். 1200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்
