அந்த மாநிலத்தில் கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. 38 ஆயிரத்து 451 கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தேசிய பேரிடர் இழப்பு மூலமாக 3,818 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அறிக்கை அளித்திருந்தது. மத்திய குழுவும், கர்நாடகத்தில் ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளித்திருந்தது.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக 1201 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 303 கோடி ரூபாயும், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 897 கோடி ரூபாயும் ஒதுக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
