தமிழகத்தில் 5 ஆயிரத்து 573 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழில் தொடங்குவதென, 15 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. 1,480 கோடி ரூபாய் மதிப்பிலான 5 திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
2019 முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களின் திட்ட அடிக்கல் நாட்டு விழா மற்றும் உற்பத்தி தொடக்க விழா தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 3 நிறுவனங்களில் உற்பத்தியை தொடங்கி வைத்தார்.
கோவை கல்லாப்பாளையத்தில் 20.12 கோடி ரூபாய் மதிப்பில் நிஸ்வின் புட்ஸ் கோதுமை மாவு அரைக்கும் ஆலை,
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொழில்பூங்காவில் 39 கோடி ரூபாய் மதிப்பிலான JS Autocast limited எந்திர வார்ப்பு ஆலை,
காஞ்சி வல்லம் வடகால் தொழில்பூங்காவில் 62 கோடி ரூபாய் மதிப்பில் ITW இந்தியா ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் ஆலையில் உற்பத்தி தொடங்கி வைக்கப்பட்டது. 121.12 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டங்கள் மூலம்
1, 280 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இதேபோல் 15 நிறுவனங்களுடன் 5,573.89 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 28,566 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் செய்து கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
கோவை ஆர்.கே.ஜி தொழில் பூங்காவில் 50 கோடி ரூபாய் மதிப்பில் mahle electric drives நிறுவனத்தின் மோட்டார்ஸ் மற்றும் கண்ட்ரோல்லர்ஸ் உற்பத்தி செய்யும் திட்டம், சென்னை சோழிங்கநல்லூரில் 336 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இன்போசிஸ் பிரைவேட் லிமிடெட் – தகவல் தொடர்பு சேவைத் திட்டம், திருவள்ளூர் – கும்மிடிப்பூண்டியில் 79.82 கோடி ரூபாய் மதிப்பில், நிஸ்ஸெ எலெக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மின்சார பணிக்கான உபரி பாகங்கள் உற்பத்தி திட்டம்,
50 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு தொழில் வெடிமருந்து நிறுவனத்துடன் இணைந்து வெடிமருந்து தயாரிப்பு செய்வது உள்ளிட்ட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இது தவிர முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாகிய ஒப்பந்தங்களின் படி, 1,480 கோடி ரூபாய் மதிப்பிலான 5 திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
காஞ்சிபுரம் சிறுசேரி தகவல் தொழில்நுட்பப் பூங்கவில் 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில், டீ.சி.எஸ். தகவல் தொழில்நுட்பத் திட்டம், திருவண்ணாமலை செய்யாறு தொழில் பூங்காவில் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் Schwing shetter india pvt ltd நிறுவனத்தின் கட்டுமான உபகரணங்கள் தயாரிக்கும் திட்டத்திற்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
காஞ்சி வல்லம் – வடகால் தொழில்பூங்காவில் 107.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் TSUGAMi precision engg india pvt ltd நிறுவனத்தின் CNC மெசின் உபகரணங்கள் தயாரிப்பு, வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் 64.62 கோடி ரூபாய் மதிப்பில் அலோக் மாஸ்டர் பேட்சஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மாஸ்டர்பேட்சஸ் உற்பத்தி திட்டம், திருவண்ணாமலை செய்யாறில் 58 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்வா டெகோபார்ட்ஸ் நிறுவனம், பிளாஸ்டிக் மோல்டிங் – குரோம் பிளாண்டிங் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
இந்த திட்டங்களின் மூலம், 7 ஆயிரத்து 175 கோடியே 71 லட்சம் ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 45 ஆயிரத்து 846 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
