டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டிடம் ஒன்றில் தீப்பிடித்தது. 34 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை எந்த வித உயிர்ச்சேதமும் இல்லை.
எமர்ஜென்சி வார்டு அருகே தீப்பிடித்திருப்பதாகவும் அந்தக் கட்டிடம் நோயாளிகளுக்கானதல்ல மருத்துவர்கள் இருக்குமிடம், மற்றும் பரிசோதனைக்கூடம் உள்ள இடம் என்று தெரிகிறது.
கட்டிடத்தின் முதல் தளத்தில் தீப்பிடித்ததாகவும் புகை 2ம் தளம் வரை சென்றதாகவும் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
அருண் ஜேட்லி சிகிச்சை பெறும் கட்டிடம் வேறு இடத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், இந்தக் கட்டிடத்துக்கும் அருண் ஜேட்லி இருக்கும் ஐசியுவுக்கும் பாதுகாப்பான தொலைவு இருப்பதாகக் கூறப்படுகிறது.
