மகாராஷ்ட்ர மாநிலம் மும்பையில், அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
பாந்த்ரா புறநகர் பகுதியான எஸ்.வி.சாலையில் எம்.டி.என்.எல் தொலைதொடர்பு நிறுவனம் இயங்கிவரும் 9 அடுக்கு மாடிக் கட்டிடம் அமைந்துள்ளது. இந்நிலையில் இக்கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மள மளவென பற்றி எரிந்த தீயால், அக்கட்டிடத்தில் இருந்த நூற்றுக்கணக்கானோர் பதறியடித்துக்கொண்டு கட்டிடத்தின் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து சுமார் 14 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விபத்திற்கான காரணம் மற்றும் விபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்த முழு விபரம் தெரிவிக்கப்படாத நிலையில், கட்டிடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
