காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் சோமஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் கவிதா கைது செய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனிடையே, பணிநீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி கவிதா தாக்கல் செய்துள்ள மனுவில், நிதி முறைகேட்டுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், 90 நாட்களுக்கு மேலாகியும் தனக்கு எதிராக எந்த குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யாததால், பணியிடை நீக்கத்தில் வைத்திருப்பது சட்டவிரோதமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கவிதா கைது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
