எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, அவருக்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த 2017ம் ஆண்டு இதே நாள் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி, சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசின் சாதனைகள் அடங்கிய புத்தகங்கள் மற்றும் சிடி வெளியிடப்பட்டது.
சாதனை புத்தகங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்று முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு மாலை அணிவித்தனர்.
