அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலமைச்சர் நடத்திய முதலீட்டாளர்கள் சந்திப்பில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஜீன் மார்ட்டின் ((Jean Martin)), அகியுல் சிஸ்டம்ஸ் ((Aquil Systems)), சிட்டஸ் பார்மா ((Scitus Pharma)) நுர்ரே கெமிக்கல்ஸ் ((Nurray Chemicals)), ஜோகோ ஹெல்த் ((Jogo Health)), எமர்சன் ((Emerson)) உள்ளிட்ட 16 நிறுவனங்களுடன், தமிழகத்தில் 2 ஆயிரத்து 780 கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஹால்டியா பெட்ரோகெமிக்கல்ஸ் ((Haldia Petrochemicals)), நாப்தா கிராக்கர் ((Naphtha Cracker)) ஆகிய இரு நிறுவனங்கள், 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் உற்பத்தி ஆலை அமைக்க கொள்கை அளவில் ஒப்பந்தம் செய்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக, சான்பிரான்சிஸ்கோ நகருக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அங்கு நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் 16 நிறுவனங்கள் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு தொழில் தொடங்க, முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
