சந்திரகிரகணத்தின்போது திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
சந்திரகிரகணத்தையொட்டி, அனைத்து ஆலயங்களும் மூடப்பட்டிருந்த நிலையில், திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் மட்டும் நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. தியாகராஜ சுவாமிக்கு சந்திரகிரகண மகா அபிஷேகம் மற்றும் பூர்வாங்க பூஜைகளும், கிரகணம் முடியும் நேரத்தில் வலம்புரி சங்கில் பன்னீர் அபிஷேகமும் செய்யப்பட்டது. திருவாரூரில் வீற்றிருக்கும் சுவாமி, அனைத்து தோஷங்களையும் ஏற்று மக்களை காப்பதாக ஐதீகம்.
சந்திர கிரகணத்தை ஒட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நேற்று இரவு மூடப்பட்டது.
கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை நேற்று இரவு அடைக்கப்பட்டு காலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது.
சந்திரகிரகணத்தால் ஏற்பட்ட தோஷ பரிகாரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகள் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் ஏகாந்தமாக நடைபெற்றது. சம்பிரதாய முறைப்படி புதிய கணக்கு தொடங்கும் ஆனி வார ஆஸ்தானம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, காலை 11 மணிக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
