கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு இடையிலான ரேஸின்போது, மாணவியின் கார் இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மோதி விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
கோவை கொடிசியா வளாகம் அருகே கட்டுப்பாடற்ற வேகத்தில் வந்த கார் ஒரு திருப்பத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார்.
கோவை அவினாசி சாலை ஜென்னி கிளப்பில் இருந்து தண்ணீர் பந்தல் என்ற இடத்துக்கு சென்ற கல்லூரி மாணவி தர்சனா ரூத் என்பவரே விபத்தை ஏற்படுத்தியவர் என்றும் கல்லூரி மாணவிகளுக்கு இடையிலான ரேஸின் போது விபத்து நேர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இருச்சர வாகனத்தில் வந்து விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர் பாலாஜி, பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்கு காரணமான கல்லூரி மாணவி தர்சனா ரூத் மீது பீளமேடு போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
