தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 25ம் தேதி சொந்த ஊர் செல்பவர்களுக்காக, அரசுப் பேருந்துகளில் இன்று முன்பதிவு தொடங்குகிறது.
தீபாவளிப் பண்டிகை அக்டோபர் மாதம் 27ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. சென்னையில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும், 1200 பேருந்துகளில் நாள்தோறும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.
அவற்றில் பயணிக்க 60 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி அக்டோபர் 25ம் தேதி சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு இன்று முன்பதிவு தொடங்குகிறது. www.tnstc.in மற்றும் 2 தனியார் இணைய தளங்கள் மூலம் பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
