பிரபல இந்தி நடிகை வித்யா சின்ஹா மும்பையில் காலமானார். அவருக்கு வயது 71.
எண்பதுகளில் வெளியான சோட்டி சி பாத், ரஜினிகந்தா போன்ற ஏராளமான படங்களில் நடித்து புகழ் பெற்றவர் வித்யா சின்ஹா
சில காலம் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த வித்யா சின்ஹா, இந்தியா திரும்பி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்தார். சுதந்திர தினத்தன்று நுரையீரல் பிரச்சினையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வித்யா சின்ஹா சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
