மக்களவை தேர்தலுக்கு பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய நிர்வாகிகளை பாஜக தலைமை நியமனம் செய்துவருகிறது. அந்த வகையில், பீகார் மாநிலத்தின் பாஜக தலைவராக இருந்துவந்த நித்யானந்த் ராய்க்கு பதிலாக, மக்களவை உறுப்பினர் சஞ்சய் ஜெய்ஸ்வாலை அம்மாநிலத்தின் தலைவராக பாஜக தலைமை நியமனம் செய்துள்ளது. பீகாரில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த தலைமை மாற்றம் அம்மாநில அரசியலில் முக்கிய நகர்வாக கருதப்படுகிறது.
அதேபோல, ராஜஸ்தான் மாநிலத்திற்கான பாஜக தலைவராக, சட்டமன்ற உறுப்பினர் சதிஷ் புனியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அம்மாநில பாஜக தலைவராக இருந்துவந்த மதன் லால் சைனி அண்மையில் காலமானார். இதையடுத்தே அப்பதவிக்கு சதிஷ் புனியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
