ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் மசோதாவும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிரிப்பதற்கான மறுசீரமைப்பு மசோதாவும் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
