தேசிய பாதுகாப்புப் படையான என்.எஸ்.ஜியின் தலைமை இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அனுப் குமார்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
1985ம் ஆண்டு குஜராத் பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரியான இவரது நியமனத்திற்கு, பிரதமர் மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை என்.எஸ்.ஜி. தலைமை இயக்குநராக அனுப்குமார்சிங் பதவி வகிப்பார் என மத்திய பணியாளர் பயிற்சித்துறை வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையில் ஈடுபடவம், விமானக் கடத்தல் சம்பவங்களைத் தடுக்கவும் கடந்த 1984ம் ஆண்டு என்.எஸ்.ஜி உருவாக்கப்பட்டது.
உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியிலும் என்.எஸ்.ஜி. வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
