மதுரை செல்லும் முன்னதாக சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் “பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மதுரை வருகிறார். அங்கு 18 பாராளும்னற தொகுதி பொறுப்பாளர்களை சந்தித்து பேச இருக்கிறார் அதற்காக மதுரை செல்கிறேன்.
தமிழமத்தில் அதிமுக – பாஜக- பாமக என வலுவான கூட்டணி அமைந்துள்ளது. தேமுதிக விரைவில் வர இருக்கிறது. இந்த வலுவான கூட்டணியை ஸ்டாலின் பதட்டதோடு எதிர்கொண்டு வருகிறார், எங்கள் கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணியாக இருக்கிறது.
மத்தியில் நல்ல திட்டங்களை கொண்டு வரும் அரசு இருக்கும் போது வைகோ எதுக்கு கருப்புக்கொடி காட்ட வேண்டும், மக்கள் வைகோவை மன்னிக்க மாட்டார்கள்,
தென் இந்தியாவிலேயே தமிழகம் தான் பிரதமரின் மக்கள் நல திட்டங்களை அதிகம் பெற்று முதலிடத்தில் உள்ளது.
விஜயகாந்தை திருநாவுக்கரசர் உடல் நலம் குறித்து விசாரிக்கவே சந்தித்திருப்பார் , சந்திப்பில் அரசியல் பேசினாலும் கூட தேமுதிக மக்கள் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டவர்கள், அதனால் அவர்கள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள், நாடாளுமன்ற தேர்தலில் கட்சி தலைமை எங்கு போட்டியிட சொல்கிறதே அங்கு நான். போட்டியிடுவேன்.
