நாட்டின் பாதுகாப்பு உறுதியாக இல்லையானால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காவல்துறையின் ஆராய்ச்சிப் பிரிவு 49வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விரிவான உரை நிகழ்த்தினார். குற்றங்களை கண்டுபிடிக்க அறிவியல் முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் குற்றவாளிகளிடம் மூன்றாம் தர போலீஸ் உத்திகளை கையாள்வதை கைவிட வேண்டும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடியுடன் தாம் பேசிய போது தேசிய அளவிலான குழு அமைத்து நாட்டின் குற்ற மன நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்
