சென்னை: சென்னை அண்ணா நகரில் 15 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டதால் குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உறைந்தனர்.
சென்னையில் அண்ணாநகரில் சாந்தி காலனியில் 4ஆவது அவென்யூ சாலை உள்ளது. இங்கு இன்று காலை அனைவரும் பள்ளிகளுக்கும், பணிகளுக்கும் பரபரப்பாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த சாலையில் 15 அடிக்கு திடீர் பள்ளம் உருவானது. இதனால் வாகனஓட்டிகள் சாலைகளில் அப்படியே நின்று விட்டனர். இதுகுறித்து மாநகராட்சிக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அவர்கள் நேரில் வந்து அந்த பள்ளத்தை மூடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.
இந்த பள்ளம் மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது போல் அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
