கருப்பு பணத்துக்கு எதிராக பிரதமர் மோடியின் அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியர்களின் கணக்கு விவரங்களை இந்திய அரசுக்கு தர ஸ்விட்சர்லாந்து அரசு முடிவு எடுத்துள்ளது.
கடந்த 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஸ்விஸ் வரித்துறை துணைத்தலைவர் மற்றும் சர்வதேச நிதித்துறை செயலர் நிக்கோலஸ் மாரியோ லுஸ்சர் தலைமையிலான குழுவினர் டெல்லியில் இந்திய வரித்துறை அதிகாரிகளுடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
வருவாய்த்துறை செயலர் ஏபி பாண்டே, மத்திய நேரடி வரிவிதிப்புத் துறை தலைவர் பி.சி .மோடி உள்பட பலர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டனர். இதனையடுத்து ஆட்டோமெட்டிக் எக்ஸ்சேஞ்ச் ஆப் பைனான்ஸ் இன்பார்மேஷன் என்று அழைக்கப்படும், வங்கிக் கணக்குகள் குறித்து தகவல் பரிமாற்றம் செய்ய ஸ்விஸ் அரசு ஒப்புதலை அளித்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்துள்ள அனைத்து இந்தியர்களின் விவரங்களும் இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட உள்ளது. அதேபோல கடந்த ஆண்டில் முடிக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் விவரமும் தெரிவிக்கப்படும்.
