மும்பை-டெல்லி இடையிலான விஸ்தாரா விமானம் அவசரமாக லக்னோவில் தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தில் இன்னும் 10 நிமிடங்களுக்கு பறப்பதற்கான எரிபொருள் மட்டுமே மிச்சமிருந்தது. ஏர்பஸ் ஏ 320 என்று பெயரிடப்பட்டுள்ள அந்த விமானம் 153 பயணிகளுடன் மும்பையில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டது.
ஆனால் விமானத்தில் எரிபொருள் இல்லை என்று விமானி அளித்த புகாரின் பேரில் அந்த விமானம் டெல்லியில் தரையிறங்க முயற்சித்தபோது, வானிலை காரணமாக தரையிறங்க முடியவில்லை இதனையடுத்து லக்னோவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது.
கான்புர் , பிரயாக் ராஜ் உள்ளிட்ட விமான நிலையங்களும் உஷார்ப்படுத்தப்பட்டன. லக்னோவில் வானிலை நிலைமை சீராக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து விமானம் லக்னோவுக்குத் திருப்பிவிடப்பட்டது.
