கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பேராசிரியை நிர்மலாதேவி, நீதிமன்ற வளாகத்திலேயே தியானத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்படும் வழக்கில் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், வருகிற 22ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியேறாத நிர்மலாதேவி, கண்களை மூடிக்கொண்டு அங்கேயே அமர்ந்து தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார்.
அருள்வாக்கு சொல்வதுபோல முணுமுணுத்த அவர், தனக்கு காலை 10 மணிக்கே தீர்ப்பு கிடைத்து, தான் விடுதலையாகிவிட்டதாகவும் தனக்கு எதிராக குற்றஞ்சாட்டிய மாணவிகள் தூக்குபோட்டு இறந்துவிட்டதாகவும் கூறி அதிர வைத்தார்.
தனது முடிகளை தானே வெட்டி அதனை தனது காதில் செருகிக்கொண்டும் அவர் அமர்ந்திருந்தார். நீண்ட நேரம் தியானத்தில் இருந்தவர் அதன் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.
