பழைய டெல்லி நகரின் வர்த்தக மையான சாந்தினி சவுக்கில் கோவில் ஒன்றையும் சாமி சிலைகளையும் சில விஷமிகள் சேதம் செய்ததையடுத்து அங்கு இருதரப்பினரிடையே மோதல் வெடித்துள்ளது.
இதில் ஒரு முஸ்லீம் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டதையடுத்து கலவரம் பரவியது. கல்வீச்சு சம்பவங்களுடன் வன்முறை தலைவிரித்தாடியதை அடுத்து கடைகள் அடைக்கப்பட்டன. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாருடன் துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற லால் குவான் பகுதியில் தடுப்புகள் போடப்பட்டு சோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இருசக்கர வாகன பார்க்கிங் தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட சாதாரண வாக்குவாதம் மிகப் பெரிய மதக்கலவரத்துக்கு வித்திட்டு விட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இருதரப்பினரிடையே சமாதான முயற்சியில் ஈடுபடுவதால் இன்று கடைகளைத் திறக்க வணிகர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
