விதிமுறைகளை மீறி பேனர் வைப்பது தொடர்பான விசயத்தில் நீதிமன்ற உத்தரவுகளை அரசு இன்னும் முழுமையாக செயல்படுத்தவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
விதிமுறைகளை மீறி பேனர் வைத்தது தொடர்பாக, டிராபிக் ராமசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன், நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விதிமுறைகளை மீறி பேனர் வைக்கப்படுவது இன்னும் தொடர்வதாகவும், இந்த விசயத்தில் நீதிமன்ற உத்தரவுகளை அரசு இன்னும் முழுமையாக செயல்படுத்தவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் அரசு கஷ்டபட்டு தான் பாடம் கற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். கடந்த 24 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவுக்காக விதிகளை மீறி காஞ்சிபுரம் மாவட்டத்தில் பேனர் வைக்கபட்ட விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை தெடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், காஞ்சிபுர நகராட்சி ஆணையர் ஆகியோர் மார்ச் 13 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
