இரண்டாயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை, ஜெயலலிதா பிறந்த நாளன்று, சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். கஜா புயல் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைத் தொழிலாளர்கள் 60 லட்சம் பேருக்கு, தலா இரண்டாயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் என்று, முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார். தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் இந்த நிதி வழங்க முடிவு செய்யப்பட்ட நிலையில், வரும் 24 ஆம் தேதி, திட்டம் தொடங்கப்படுகிறது.
