பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, அவரது உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் அளிக்கப்பட்டதாக டிஐஜி ரூபா புகார் கூறியிருந்தார். ஆனால் அதை சிறைத்துறை உயரதிகாரிகள் மறுத்திருந்தனர்.
பெங்களூரு, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, அவரது உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் அளிக்கப்பட்டதாக டிஐஜி ரூபா புகார் கூறியிருந்தார்.
மேலும், சிறை வளாகத்தில் உள்ள 28 அறைகளி்ல் 100 பெண்கள் இருந்தனர்.அறைக்கு நான்கு பேர் வீதம் தங்கவைப்பதற்கு பதிலாக சசிகலாவுக்கு ஐந்து அறைகள் ஒதுக்கியது போக மீதமிருந்த 20 அறைகளில் 98 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
சிறை அலமாரியை துழாவியபோது சமையல் மஞ்சள்தூள் காணப்பட்டது. அது அங்கு சமையல் நடந்ததை உறுதி செய்கிறது என பல்வேறு தகவல்கள் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
