பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் 500 ஆண்டுகள் பழமையான குருத்வாரா உள்ளது. அங்கு சீக்கியர்கள் புனித பயணம் செல்ல இருநாடுகளும் பாதை அமைத்துள்ளன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார், கர்த்தார்புர் செல்லும் இந்திய சீக்கிய பக்தர்களுக்கு பாகிஸ்தான் அரசு 20 டாலர் கட்டணம் விதித்திருப்பதாகவும், அதனை ரத்து செய்ய வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இப்பிரச்சினை காரணமாகவே கர்த்தார்புர் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றும் பலசுற்று பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கர்த்தார்புரை இணைக்கும் பஞ்சாப் மாநிலத்தின் நெடுஞ்சாலைக்கு குருநானக் தேவ்ஜி மார்க் ((Shri Guru Nanak Dev Ji Marg.”))என்று பெயரிடப்பட்டிருப்பதாக அறிவித்தார்.
