அந்த நபர் சிங்கத்திற்கு மிக அருகில் நின்றிருக்கும் வீடியோக் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதில் சிங்கத்தின் முகத்துக்கு அருகில் நிற்கும் அவர் ஏதோ பேசுவது போலவும், பின்னர் சிங்கம் முன்னோக்கி நகர அந்த நபர் கீழே அமர்வது போன்றும் காட்சிகள் உள்ளன.
இதனை பார்த்த பூங்கா ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து சாதுர்யமாக அந்த நபரை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட நபர் பீகாரை சேர்ந்த ரேஹன் கான் எனவும், 28 வயதான அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பது போல் தெரிவதாகவும் போலீசார் கூறியுள்ளனர். சிங்கத்தை நேருக்கு நேர் சந்தித்தும் காயமேதுமின்றி உயிர்பிழைத்த ரேஹன் கான், மிகவும் அதிர்ஷ்டசாலி என பலரும் கருத்து தெரிவித்துள்ள நிலையில், டெல்லி உயிரியல் பூங்காவில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.
