மஹாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்ற போது மேடையில் மயங்கி விழுந்தார்.
அஹமதாபாத்தில் உள்ள மகாத்மா புலே வேளாண் பல்கலைகழகத்தில் சிறப்பு விருந்தினாரக பங்குபெற்று பேசிய நிதின் கட்கரி. தனது உரையை முடித்து இருக்கைக்கு திரும்பும் போது தீடீரென சரிந்து விழுந்தார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் மயங்கிய அமைச்சருக்கு தண்ணீர் கொடுத்தனர். இதனையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அமைச்சரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
